UPDATED : அக் 12, 2026 09:16 PM
ADDED : அக் 12, 2026 07:59 PM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: பணம் வைத்து சூதாடியவர்களின் 8 பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த எஸ்.புதுக்குப்பத்தில் பணம் வைத்து, சூதாடுவதாக புகார் எழுந்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, எஸ்.புதுக்குப்பம் பிரபாகரன் முந்திரி தோப்பில் சூதாடிக் கொண்டிருந்தவர்கள், போலீசாரை கண்டதும் தப்பியோடிவிட்டனர்.
சூதாடும் இடத்தில் நிறுத்தி வைத்திருந்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடிவருகின்றனர்.
