/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பரங்கிப்பேட்டை பகுதியில் 8 வீடுகள் இடிந்து சேதம்
/
பரங்கிப்பேட்டை பகுதியில் 8 வீடுகள் இடிந்து சேதம்
பரங்கிப்பேட்டை பகுதியில் 8 வீடுகள் இடிந்து சேதம்
பரங்கிப்பேட்டை பகுதியில் 8 வீடுகள் இடிந்து சேதம்
ADDED : நவ 25, 2025 05:14 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை பகுதிகளில், பெய்த கன மழை காரணமாக, 8 கூரை வீடுகள் இடிந்து சேதமானது.
பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நேற்று பரங்கிப்பேட்டை அரியகோஷ்டி கிராமத்தை சேர்ந்த தனவள்ளி, உத்திராபதி, அகரம் கொள்ளுமேடு சுமதி, தச்சக்காடு கிராமம் குப்பம்மாள், நிர்மலா, அகரம் ரயிலடி அன்புக்கரசி ஆகிய 6 பேரின் கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமானது .
சின்னகுமட்டி ஊராட்சி தோப்பிருப்பு கிராமத்தை சேர்ந்த பன்னீர் என்பவருடைய வீட்டு தென்னை மரத்தில் மின்னல் தாக்கியதில் அவரது வீடு மற்றும் மின்சாதன பொருட்கள் சேதமானது. வீட்டில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சத்திரம் புதுச்சத்திரம் அடுத்த மணி க்கொல்லை மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைமணி மனைவி தெய்வநாயகி, 35; இவரது ஓட்டு வீட்டின் மேற்கூரை, நேற்று மழை காரணமாக, இடிந்து விழுந்தது. தகவலறிந்த வருவாய்த் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சேதம் குறித் து ஆய்வு செய்தனர்.

