/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்று இடத்தில் கலையரங்கம் பொதுமக்கள் கோரிக்கை
/
மாற்று இடத்தில் கலையரங்கம் பொதுமக்கள் கோரிக்கை
ADDED : நவ 25, 2025 05:14 AM
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அருகே சிமெண்ட் களம் மையத்தில் கட்டப்பட்டு வரும் நாடக கலையரங்க கட்டடத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டுமென, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் மாரியம்மன் கோவில் பின்புறம் கடந்த 1996-97ம் ஆண்டு 60 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் களம் கட்டப்பட்டது. இங்கு, கடந்த காலங்களில் தானியங்கள் உளர்த்தப்பட்டு வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக கோவில் விழாக்காலங்களின் போது, கிராம மக்கள் ஒன்று கூடுகின்றனர்.
இந்நிலையில், தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நாடக கலையரங்கம் கட்டுவதற்காக கடந்த 20 நாட்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டு, கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சிமெண்ட் களம் அமைந்துள்ள இடத்தில் கலையரங்கம் கட்டுமான பணிகள் நடப்பதால் விழாக் காலங்களில் மக்கள் ஒன்று கூடுவதில் சிரமம் ஏற்படும்.
எனவே, கலையரங்கத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், கலையரங்கத்தை வேறு இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

