/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் தொழிற்சங்கத்தினர் 864 பேர் கைது
/
மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் தொழிற்சங்கத்தினர் 864 பேர் கைது
மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் தொழிற்சங்கத்தினர் 864 பேர் கைது
மாவட்டத்தில் 11 இடங்களில் மறியலில் தொழிற்சங்கத்தினர் 864 பேர் கைது
ADDED : ஜூலை 10, 2025 12:40 PM

கடலுார்: மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை கண்டித்து கடலுார் மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் உட்பட 11 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 864 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனைத்து விவசாய விளைபொருட்களுக்கும் மொத்த உற்பத்தி செலவுக்கு மேல் 50சதவீதம் கூடுதல் குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும், தொழிலாளர்களுக்கு எதிராள நான்கு சட்ட தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும். என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., எல்.எல்.எப்., உட்பட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலுார் திருப்பாதிரிப்புலியூர் அண்ணா பாலம் அருகில் சி.ஐ.டி.யூ.,மாவட்ட செயலாளர் பழனிவேல், மா.கம்யூ., மாவட்டசெயலாளர் மாதவன் தலைமையில் பல்வேறு தொழிற்சங்க பிரதிநிதிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பங்கேற்ற 20பெண்கள் உள்ளிட்ட 150பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர். கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ரயில்நிலையத்தில் பாட்டாளி வர்க்க சமரன் அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்மணி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற 40பேரை திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணத்தில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்ளிட்ட 35 பேரும், புவனகிரியில் மா.கம்யூ., மாதர் சங்க மாவட்ட தலைவர் மல்லிகா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 30 பேரும், திட்டக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 21பெண்கள் உள்ளிட்ட 78பேரும் கைது செய்யப்பட்டனர்.
விருத்தாசலத்தில் சி.ஐ.டி.யூ.,மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 72பேர், பண்ருட்டியில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், அகில இந்திய விவசாய சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 47பெண்கள் உள்ளிட்ட 130பேர், குறிஞ்சிப்பாடியில் விவசாய சங்க மாவட்ட செயலாளர் சரவணன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 58பேர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் நெய்வேலியில் போராட்டத்தில் 6 பெண்கள் உள்ளிட்ட 95பேர், சிதம்பரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 8பெண்கள் உள்ளிட்ட 92பேர், காட்டுமன்னார்கோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 47பேர், வேப்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட 17பெண்கள் உள்ளிட்ட 35பேர் கைது செய்யப்பட்டனர். கடலுார் மாவட்டத்தில் 11 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 824 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.