ADDED : அக் 16, 2024 07:09 AM
பெண்ணாடம், ; பெண்ணாடம் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வேன், லாரி மீது மோதியதில் 9 பேர் படுகாயமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திட்டக்குடி அடுத்த தி.இளமங்கலத்தை சேர்ந்தவர் சிவபழனி, 56. இவர், நேற்று காலை நெய்வேலியல் நடந்த துக்க நிகழ்ச்சிககு, உறவினர்கள் 20 பேருடன் வேனில் சென்றார். கொட்டாரம் தமிழ்ச்செல்வன், 24, என்பவர் ஓட்டிச்சென்றார்.
பெண்ணாடம் அடுத்த இறையூர் சர்க்கரை ஆலை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, முன்னால் சென்று கொண்டிருந்த டாரஸ் லாரி திடீரென நின்றபோது, எதிர்பாராத விதமாக, லாரி மீது வேன் மோதியது.
இதில், வேனில் சென்ற தி.இளமங்கலம் கண்ணகி, 70; கலைச்செல்வி, 45, ரேணுகா, 40, அருள்செல்வி, 35, வைத்தியலிங்கம், 60, சுசிலா, 58, கொளஞ்சியப்பன், 63, ரெங்கநாயகி, 55, பெரம்பலுார் மாவட்டம், கோவில்பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி கொளஞ்சி, 60, ஆகிய 9 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகிலுள்ளவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெணணாடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.