/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது
/
கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது
கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது
கடலுாரில் 23 கிலோ கஞ்சா பறிமுதல்; விற்பனையில் ஈடுபட்ட 9 வாலிபர்கள் கைது
ADDED : மார் 30, 2025 08:32 AM

கடலுார் : கடலுாரில் கஞ்சா விற்ற 9 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கடலுார், அடுத்த எம்.புதுாரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், டி.எஸ்.பி., ரூபன்குமார், திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், கணபதி, ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை எம்.புதுாரில் காசநோய் மருத்துவமனை அருகே உள்ள பாழடைந்த கட்டடத்தை சுற்றி வளைத்து, அங்கிருந்த 9 பேரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர்கள் எம்.புதுார் புதுநகர் ரங்கசாமி மகன் சிவாஜி (எ) சிவாஜிகணேசன்,19; சுரேஷ் மகன் தோல் (எ) சூர்யபிரதாப்,21; சென்னை மேற்கு முகப்பேர் வேலு மகன் சந்துரு (எ) சந்திரசேகர்,29; பண்ருட்டி கொக்குப்பாளையம் பிள்ளையார் கோவில் தெரு வீரபத்திரன் மகன் ஆனந்த்,22; கடலுார் கோண்டூர் பெரியத் தெரு லட்சுமணன் மகன் சூர்யா (எ) விஜய்,21; திருவந்திபுரம் புதுநகர் சிவா மகன் எலி (எ) விக்னேஷ்,22; கலியபெருமாள் மகன் அரி (எ) அரவிந்த் 23; அரிசிபெரியாங்குப்பம் நீலப்பன் மகன் குண்டுபாலா (எ) ஆகாஷ்,19; கடலுார் வண்டிப்பாளையம் ரோடு, சிவா நகர் மகாதேவன் மகன் கார்த்தி (எ) கார்த்திகேயன்,20; என்பதும், இவர்கள் அனைவரும் கூட்டாக சேர்ந்து ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வியாபாரம் செய்து வருவது தெரிய வந்தது.
அதன்பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து 9 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்கள் பதுக்கி வைத்திருந்த 23 கிலோ கஞ்சா, அவர்கள் பயன்படுத்திய 7 மொபைல் போன்கள் மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து 9 பேரையும் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.