/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா வியாபாரிக்கு 'மாவுக்கட்டு'
/
கஞ்சா வியாபாரிக்கு 'மாவுக்கட்டு'
ADDED : நவ 23, 2025 06:42 AM

நெய்வேலி: நெய்வேலியில் போலீசுக்கு பயந்து தப்ப முயன்ற கஞ்சா வியாபாரி கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கடலுார் மாவட்டம், நெய்வேலி, வட்டம் 3, தோப்புகொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் கவி (எ) கவியரசன்,26; இவரை, கஞ்சா வழக்கு மற்றும் பெண்ணை தாக்கி சொத்தை சேதப்படுத்திய வழக்கில் நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், என்.எல்.சி., தைலம்தோப்பு அருகே அவர் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், இன்ஸ்பெக்டர் வீரமணி, சப் இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது, போலீசாரை பார்த்ததும் அருகில் இருந்த ஓடையை தாண்டி குதித்து தப்ப முயன்ற போது, கவியரசனுக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடன், அவரை போலீசார் கைது செய்து, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
இவர் மீது நெய்வேலி டவுன்ஷிப், தெர்மல், முத்தாண்டிகுப்பம் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு, ஆயுதம் வைத்திருந்த வழக்கு, திருட்டு வழக்கு, சொத்தை சேதப்படுத்திய வழக்கு, சண்டை வழக்குகள் என 9 வழக்குகள் உள்ளன.

