/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்பியில் சிக்கி பசுமாடு பலி
/
மின்கம்பியில் சிக்கி பசுமாடு பலி
ADDED : நவ 23, 2025 06:41 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த வாண்டராசன்குப்பத்தை சேர்ந்தவர் முருகையன். இவர் நேற்று மதியம் தமது பசு மாட்டை மேய்ச்சலுக்கு, மாரியம்மன் கோவில் தெரு வழியாக ஓட்டி சென்றார்.
அப்போது அந்த வழியில் உள்ள மின்கம்பத்தின் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசியதில் மின்கம்பி அறுந்து கீழே விழுந்து கிடந்தது.
இதை அறியாமல், முருகையன் மாட்டை ஓட்டி சென்றார். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பசு மாடு சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தது.
பசு மாடு கீழே விழுந்ததை கண்ட முருகையன் மாட்டை தூக்குவதற்கு ஓடினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் முருகையனை தடுத்ததால் அவர் மின் விபத்திலிருந்து தப்பினார்.
மாட்டை பார்த்து முருகையன் கதறி அழுதார். தகவலறிந்த நடுவீரப்பட்டு மின்வாரிய அதிகாரிகள் விரைந்து வந்து அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்து மின்சாரம் வழங்கினர்.

