/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு
/
பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு
பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு
பா.ம.க., மாவட்ட செயலாளர் உட்பட 32 பேர் மீது வழக்கு
ADDED : அக் 03, 2024 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் அரசு மருத்துவமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., மாவட்டசெயலாளர் உட்பட 32பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கடலுார் கம்மியம்பேட்டையை சேர்ந்த டிரைவர் கார்த்திக், 36, கடந்த 1ம் தேதி இறந்தார்.
அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதமானதை கண்டித்து, கடலுார் அரசு மருத்துவமனை முன்பு, பா.ம.க., மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முத்துகிருஷ்ணன் உட்பட 32பேர் மீது கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.