ADDED : நவ 03, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்றவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.
மங்கலம்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றபோது, கோவிலுாரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த நடேசன் மகன் ஏழுமலை, 38, என்பதும், கள்ளத்தனமாக டாஸ்மாக் மது விற்பதும் தெரிந்தது. அவரிடம் இருந்து 8 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழுமலை மீது மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.