/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையில் விளையாடிய குழந்தை டிராக்டரில் சிக்கி பலி
/
சாலையில் விளையாடிய குழந்தை டிராக்டரில் சிக்கி பலி
ADDED : செப் 23, 2024 06:23 AM

நெல்லிக்குப்பம் : சாலையில் விளையாடிய குழந்தை, டிராக்டர் மோதியதில் பரிதாபமாக இறந்தது.
கடலுார் அடுத்த எய்தனுாரை சேர்ந்தவர் தேவ். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு கிரீன், 4; கிஷாந்த், 2; ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.குழந்தை கிஷாந்த் நேற்று மதியம், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் சித்தப்பா முகிலன், வயலில் உழவு ஓட்டிவிட்டு, டிராக்டரில் வீட்டிற்கு வந்தபோது, திடீரென சாலைக்கு ஓடி வந்த குழந்தை, டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தது.
தகவலறிந்த நெல்லிக்குப்பம் போலீசார், குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.