ADDED : நவ 13, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிதம்பரம் அடுத்த சாமியார்பேட்டையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், கடந்த 2023- 2024 ம் ஆண்டு சிதம்பரம் தொகுதி எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 34 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது. பணி முடிந்து பல மாதங்களாகியும், திறக்கப்படாமல் காட்சி பொருளாக உள்ளது.
எனவே பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, காட்சி பொருளாக உள்ள சமுதாய நலக் கூடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.