/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர் தலையில் விழுந்த மின்விசிறி அரசு ஐ.டி.ஐ.,யில் பரபரப்பு
/
மாணவர் தலையில் விழுந்த மின்விசிறி அரசு ஐ.டி.ஐ.,யில் பரபரப்பு
மாணவர் தலையில் விழுந்த மின்விசிறி அரசு ஐ.டி.ஐ.,யில் பரபரப்பு
மாணவர் தலையில் விழுந்த மின்விசிறி அரசு ஐ.டி.ஐ.,யில் பரபரப்பு
ADDED : பிப் 19, 2024 11:29 PM
கடலுார், : கடலுார் அரசு ஐ.டி.ஐ., யில் மாணவர் தலையில் மின்விசிறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார் அடுத்த பெரிய காட்டுப்பாளயத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவர். கடலுார் செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ.,யில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று காலை 10:00 மணியளவில் மாணவர் வகுப்பறையில் அமர்ந்திருந்தார். அப்போது, வகுப்பறையில் ஓடிக்கொண்டிருந்த மின்விசிறி திடீரென கழன்று, மாணவர் தலையில் விழுந்தது.
இதில் படுகாயமடைந்த மாணவரை, பயிற்றுனர் மற்றும் சக மாணவர்கள், கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இது குறித்து புதுநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.