/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
இளமையாக்கினார் கோவிலில் வரலாற்று உற்சவம்
/
இளமையாக்கினார் கோவிலில் வரலாற்று உற்சவம்
ADDED : பிப் 04, 2024 03:20 AM

சிதம்பரம் : சிதம்பரம் இளமையாக்கினார் கோவிலில், திருநீலகண்ட நாயனார் இளமைபெற்ற வரலாற்று உற்சவம் நடந்தது.
சிதம்பரத்தில் இளமையாக்கினார் எனும், யெளவனாம்பாள் சமேத யெளவனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வரலாற்று உற்சவம் மற்றும் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவு சாமி வீதியுலா மற்றும் திருவோடு கொடுத்தல், புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று மதியம் சாமி வீதியுாவிற்கு பிறகு, இளமையாக்கினார் கோவில் தீர்த்தக் குளக்கரையில் எழுந்தருள செய்யப்பட்டது.
தொடர்ந்து சிவபெருமான், சிவயோகியார் வடிவத்தில் வருகை தந்து திருநீலகண்ட நாயனார், ரத்தினசாளை தம்பதியினருக்கு, திருவோடு கொடுத்து இளமையாக்கிய வரலாற்று நிகழ்வு நடந்தது.
திருநீலகண்ட நாயனார் குருபூஜையை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.
ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் காரைக்குடி பழனியப்பன் மற்றும் அவரது குடும்பத்தார் செய்திருந்தனர்.