/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சார் பதிவாளர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
/
சார் பதிவாளர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
சார் பதிவாளர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
சார் பதிவாளர் ஆபீசில் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு
ADDED : ஜன 07, 2025 07:32 AM

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
பண்ருட்டி அடுத்த நடுவீரப்பட்டை சேர்ந்தவர் சிவக்குமார்,45; இவருக்கு மருங்கூர் ஊராட்சி எல்லையில் இரு மனைகள் உள்ளன. அந்த மனை விற்பனைக்கு பதிவு செய்ய காடாம்புலியூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றார். சார்பதிவாளர் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தியதாக கூறப்படுகிறது.
சிவக்குமார், நேற்று மாலை 5:00 மணியளவில் சார்பதிவாளரிடம், தனது மனையை பத்திர பதிவு செய்ய வேண்டும் என வாக்குவாதம் செய்தார். பின்னர் வெளியே சென்று தயாராக வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்வேன் என கூறி, தர்ணாவில் ஈடுபட்டார்.
அவரை காடாம்புலியூர் சப் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.