ADDED : நவ 13, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : மருதுார் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
புவனகிரி அருகே பி.கொளக்குடியை சேர்ந்த சேகரன் மகன் விஜய்,25; நேற்று முன்தினம் இரவு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த காமராஜ், 50; என்பவர், முன்விரோதத்தில், விஜயை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்தவர் சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்கு பதிந்து காமராஜை கைது செய்தனர்.