/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
/
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
ADDED : அக் 09, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார், : கடலுார் அருகே வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவரை, கடலுார் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.
கடலுார் திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் குப்பன் மகன் ராஜ்கமல்,26. இவர் கடந்த சில மாதங்களாக கடலுார் புதுநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராஜ்கமல் வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் நேரில் சென்று பார்த்ததில், நான்கு அடி உயர கஞ்சா செடி வளர்த்திருப்பதை உறுதி செய்தனர். அதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து ராஜ்கமலை கைது செய்தனர்.