/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மனவளர்ச்சி குன்றிய சிறுமி பலாத்காரம் 4 பேருக்கு 20 ஆண்டு சிறை; ஒருவருக்கு ஆயுள் கடலுார் 'போக்சோ' கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ADDED : பிப் 21, 2025 05:14 AM

கடலுார்: மனவளர்ச்சி குன்றிய சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கடலுார் 'போக்சோ' கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த கீழக்கடம்பூரை சேர்ந்தவர்கள் பாலு,53; விநாயகம்,55; ராமலிங்கம்,59; வேல்முருகன்,33; வேலப்பூண்டி வீராசாமி,39; இவர்கள், கடந்த 2019ம் ஆண்டு 16 வயது மனவளர்ச்சி குன்றிய சிறுமியை மிரட்டி 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இதனால் உடல் நிலை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து பாலு உட்பட 5 பேரை கைது செய்தனர்.
பின், கடலுார் 'போக்சோ' கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி லட்சுமி ரமேஷ் நேற்று தீர்ப்பு கூறினார்.
அதில், பாலு, விநாயகம், ராமலிங்கம், வேல்முருகன் ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, வீராசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.