மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி அசத்தும் நடுநிலைப்பள்ளி
மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கி அசத்தும் நடுநிலைப்பள்ளி
ADDED : மார் 08, 2026 04:52 AM

கி ராமப்புற மாணவர்களை சாதனையாளர்களாக, உருவாக்கி, அனைத்து தரப்பினரையும் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி கவர்ந்து வருகிறது.
பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் கிராமத்தில் கடந்த, 1929ல் அயல் என்பவரால், ஓராசிரியர் கொண்ட திண்ணை பள்ளியாக மணிமேகலை அரசு உதவி பெறும் பள்ளி துவங்கப்பட்டது.
தொடர்ந்து கடந்த, 1939ல், 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளியாக உயர்ந்தது. பின்னர் கடந்த, 1942ல் செல்லமுத்து என்பவரின் முயற்சியால் இப்பள்ளி நடுநிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கடந்த, 1970ல், 8ம் வகுப்புகளுக்கு 8 ஆசிரியர்கள் கொண்ட நடுநிலைப் பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது.
இப்பள்ளி கடந்த, 97 ஆண்டுகளாக சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது, அருள்மொழி என்பவர், மேலாண்மை செய்து வருகிறார்.
இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் உள்ளனர்.
இப்பள்ளிக்கு சுற்றியுள்ள வெண்கரும்பூர், காரையூர் ஆகிய கிராமங்களில் இருந்து வந்து மாணவர்கள் படித்துச் செல்கின்றனர். மேலும், இப்பள்ளி மாணவர்கள் கலை, இலக்கியம், ஓவியம், விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் குறுவட்டம், மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளனர்.
திறனறி தேர்விலும் இப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் இப்பள்ளிக்கு ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
