/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரம் கோவில் கோபுரத்தில் சுதை இடிந்து விழுந்து பரபரப்பு
/
சிதம்பரம் கோவில் கோபுரத்தில் சுதை இடிந்து விழுந்து பரபரப்பு
சிதம்பரம் கோவில் கோபுரத்தில் சுதை இடிந்து விழுந்து பரபரப்பு
சிதம்பரம் கோவில் கோபுரத்தில் சுதை இடிந்து விழுந்து பரபரப்பு
ADDED : டிச 14, 2024 02:40 AM

சிதம்பரம்,:கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் மூன்று நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு, சிதம்பரம் நடராஜர் கோவிலின் மேற்கு கோபுரத்தின் வெளிப்புறத்தில், இரண்டாம் மாடத்தில் இரு பக்கமும் அமைந்துள்ள, துவார பாலகர் சுதைகள் உடைந்து விழுந்ததால், அதன் கீழ் இருந்த சுதைகளும் சேதமடைந்தன.
அதையொட்டி, பாதுகாப்பு கருதி மேற்கு கோபுரம் வழியாக பக்தர்களை அனுமதிக்காமல், மாற்று வழியில் செல்ல அறிவுறுத்தினர்.
கோபுரத்தில் இருந்து விழுந்து சேதமான சுதை பகுதிகளை கோவில் ஊழியர்கள் அகற்றினர்.
கோபுரத்தில் இருந்து, சுதைகள் விழுந்தது, அபசகுணமாக பார்க்கப்படுகிறது. தற்போது, மழை, புயல், வெள்ள பாதிப்பு தொடர்ந்து வரும் நிலையில், சுதை உடைந்து விழுந்ததால், பெரும் இயற்கை இடர்பாடு ஏற்படுமோ என, பக்தர்கள் அச்சம் கொண்டுள்ளனர்.
இது குறித்து, பொது தீட்சிதர்கள் சார்பில், கோவில் வழக்கறிஞர்சந்திரேசகர் கூறுகையில், ''ஆகம விதிகளின்படி, பரிகார பூஜை கோவில் தீட்சிதர்களால் நடத்தப்படும். தொடர்ந்து, கோர்ட் உத்தரவு பெற்று, புதிய சுதை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார். அப்போது, கோவில் பொது தீட்சிதர்களின் செயலர் வெங்கடேச தீட்சிதர் உடனிருந்தார்.