ADDED : ஜன 12, 2024 04:01 AM

சேத்தியாத்தோப்பு,: கீரப்பாளையம் பகுதி யில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களை, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் கடந்த 7 ஆம் தேதி இரவு புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் மழைபெய்தது. இதனால், அறுவடைக்கு தயார் நிலையில் இருந் நெற்பயிர் வயல்களில் தண்ணீர் தேங்கி பாதிக்கப்பட்டது.
மழையால் பாதிக்கப்பட்ட கீரப்பாளையம் வட்டாரத்தில் உள்ள சாக்காங்குடி, கீழ்நத்தம், இடையன்பால்சொரி, ஒரத்துார், மதுராந்தகநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று புவனகிரி தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மழையால் பாதிக்கப்பட்ட கடலுார் மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீட்டினை தமிழக அரசு விரைந்து வழங்க வேண்டும்.
மாவட்டத்தில் கரும்பில் மஞ்சள்நோய் தாக்குதலால் பாதிப்பு, மழையால் சோளம், வேர்க்கடலை பயிர்கள் பாதிப்பு உள்ளிட் டவைகளுக்கு தமழக அரசிடம் இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன், மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, கீரப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பன், சேத்தியாத்தோப்பு நகரசெயலாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.