/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
/
வீட்டை உடைத்து நகை திருடிய வாலிபர் கைது
ADDED : ஜூன் 07, 2024 06:21 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, இரண்டரை சவரன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ்அருங்குணத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார், 22; இவர், கடந்த மாதம் 21ம் தேதி, பண்ருட்டியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். மறுநாள் வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து இரண்டரை சவரன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது.இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசில் பிரவீன்குமார் கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். அப்போது, கீழ்அருங்குணத்தை சேர்ந்த கலியமூர்த்தி மகன் விஷால், 22; என்பவர், வீட்டின் பூட்டை உடைத்து திருடியது தெரியவந்து,அதன்பேரில், இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப் இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் ஆகியோர், கீழ்அருங்குணம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த விஷாலை கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின்பேரில் இரண்டரை சவரன் நகை மற்றும் வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.