/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கழன்று ஓடிய டயர் கடலுாரில் பரபரப்பு
/
கழன்று ஓடிய டயர் கடலுாரில் பரபரப்பு
ADDED : நவ 15, 2025 05:05 AM

கடலுார்: சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வேனின் டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு நிலவியது.
சென்னையில் இருந்து சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள கடைக்கு புதுச்சேரி, கடலுார் வழியாக நேற்று அலுமினியம், பி த்தளை பாத்திரங்களை ஏற்றி கொண்டு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது.
கடலுார் பாரதி சாலையில் தபால் நிலைய பஸ் நிறுத்தம் அருகில் காலை, 9:00 மணிக்கு சரக்கு வேன் வந்த போது, பின்பக்க இடது சக்கரம் கழன்று ஓடி விழுந்ததால் பரபரப்பு நில வியது.
இதனால், வேன் சிறிது துாரம் சாலையை உரசியபடி சென்று நின்றது. இதனைப்பார்த்து சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடன், திடுக்கிட்ட டிரைவர் குமார் வண்டியை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் வேன் கவிழ முயன்றது.
அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், கீழே இறங்கி வேனை தாங்கி பிடித்தனர். தகவலறிந்த போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்து காரணமாக பாரதி சாலையில் 9:30 மணி வரை 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

