/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது
/
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது
வைக்கோல் ஏற்றி வந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்தது
ADDED : பிப் 21, 2024 07:47 AM

பெண்ணாடம் : பெண்ணாடத்தில் வைக்கோல் ஏற்றிவந்த டிராக்டர் மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெண்ணாடம் பகுதி கிராம விவசாயிகளிடமிருந்து அரியலுார், சேலம், ஆத்துார், வாழப்பாடி, தலைவாசல் பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகளின் தீவனத்திற்காக சம்பா நடவு வைக்கோல் வாங்கிச் செல்வது வழக்கம்.
அதன்படி, பெ.பூவனுார் கிராம விவசாயிகளிடம் இருந்து அரியலுார் மாவட்டம், செந்துறை அடுத்த சிறுகளத்துார் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர் தனது டிராக்டர் டிப்பரில் நேற்று பகல் 12:00 மணியளவில் வைக்கோல் ஏற்றிச்சென்றார்.
அப்போது, பெண்ணாடம், சோழன் நகர் தாதங்குட்டை அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலை ஓரமுள்ள மின்கம்பியில் வைக்கோல் உரசியதில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த பாஸ்கர் மற்றும் உடன் வந்தவர்கள் டிராக்டரை நிறுத்தி கூச்சலிட்டனர்.
இதையறிந்த பொது மக்கள், இளைஞர்கள் தண்ணீர் ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.