/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்து; 10 பேர் காயம்
/
தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்து; 10 பேர் காயம்
ADDED : அக் 30, 2024 05:19 AM
கடலுார் : கடலுார் அருகே தனியார் பஸ்சுடன், டிப்பர் லாரி மோதிய விபத்தில் 10பேர் படுகாயமடைந்தனர்.
புதுச்சேரியில் இருந்து மடுகரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று, நேற்று முன்தினம் இரவு சென்றது. பஸ்சை புதுச்சேரி மடுகரையைச்சேர்ந்த டிரைவர் பிரவீன்குமார்,28, ஓட்டினார். பஸ் புதுக்கடை மேம்பாலம் கீழே உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்ற போது, கடலுாரில் இருந்து திருவக்கரைக்கு ஜல்லி ஏற்றிச்சென்ற டாரஸ் லாரி தனியார் பஸ்சுடன் மோதியது.
இதில் பஸ்சில் பயணித்த ராமு,30, வசந்தி,33, கிருஷ்ணவேணி,47, விஜயா,40, காந்திமதி,32, வானதி,28, சசி,20, சுஜிதா,22, ஆனந்தி,27, மற்றும் டிரைவர் பிரவீன்குமார் ஆகிய 10பேர் காயமடைந்தனர். தகவலறிந்த ரெட்டிச்சாவடி போலீசார்
காயமடைந்தவர்களை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.