/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
/
பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : செப் 24, 2024 06:21 AM

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த மணக்காடு அருகே பாறாங்கற்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
விருத்தாசலம் - பரங்கிப் பேட்டை சாலையில், பெரம் பலுாரில் இருந்து பாறாங்கற்கள் ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரி, சேத்தியாத்தோப்பு நோக்கி வந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே மணக்காடு என்ற இடத்தில் வந்தபோது, அதிகம் பாரம் தாங்காமல், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர வயல் வெளியில் தலைகீழாக கவிழ்ந்து விபத்திற்குள்ளா னது. லாரியை ஓட்டி வந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து சேத்தியாத்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.