/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தலைமறைவு போதை வாலிபரின் மன்னிப்பு வீடியோவால் பரபரப்பு
/
தலைமறைவு போதை வாலிபரின் மன்னிப்பு வீடியோவால் பரபரப்பு
தலைமறைவு போதை வாலிபரின் மன்னிப்பு வீடியோவால் பரபரப்பு
தலைமறைவு போதை வாலிபரின் மன்னிப்பு வீடியோவால் பரபரப்பு
ADDED : செப் 11, 2025 03:19 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் காவலாளியை தாக்கி தலைமறைவான போதை வாலிபர் மன்னிப்பு கேட்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருத்தாசலத்தை சேர்ந்த திருமண மண்டப காவலாளி கார்த்திக், 45, என்பவரை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, சிவா (எ) விக்னேஷ், பாலாஜி ஆகியோர் கொடூரமாக தாக்கி ரீல்ஸ் பதிவேற்றம் செய்தனர்.
இச்சம்பவத்தில் தலைமறைவான பாலாஜி, தாக்கப்பட்ட காவலளி உள்ளிட்ட நபர்களிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ நேற்று மாலை திடீரென வாட்ஸ்ஆப்பில் வைரலானது. அதில், போதையில் தவறு செய்துவிட்டோம். ரீல்ஸ் மோகத்தில் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறோம் என 1:30 நிமிடங்கள் பேசும் வீடியோ பரவியது. போதையில் உயிர்போகும் அளவுக்கு அடித்த அவர்கள், காலில் விழுந்து கெஞ்சியும் விடவில்லை. தற்போது, துப்பாக்கிச்சூடு, மாவுக்கட்டில் இருந்து தப்பிக்க இதுபோன்ற மன்னிப்பு கேட்டால் சரியா என பலரும் விமர்சிக்க துவங்கினர். வீடியோ வைரலாகி விருத்தாசலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.