/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆதார் கார்டு ஒப்படைப்பு போராட்டத்தால் பரபரப்பு
/
ஆதார் கார்டு ஒப்படைப்பு போராட்டத்தால் பரபரப்பு
ADDED : ஜூலை 19, 2025 06:36 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டத்தால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி ஊராட்சி, முனியப்பர் கோவில் இடத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் புதிதாக கட்ட நடவடிக்கை எடுப்பதை கண்டித்து, செங்கொடி மக்கள் இயக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஊராட்சி அலுவலகம் கட்ட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்ததை எதிர்த்து, ஆதார் கார்டுகளை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வாசலில் நேற்று மாலை 6:00 மணிக்கு 30 பேர், ஆதார் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தினர்.
விருத்தாசலம் போலீ சார் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.