ADDED : டிச 04, 2025 05:23 AM
விருத்தாசலம்: புதிதாக துவங்கப்பட்டுள்ள ஆதார் சேவை மையத்தைபொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது செய்திக் குறிப்பு;
விருத்தாசலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் இயங்கி வரும் ஆதார் சேவை மையத்திற்கு பொதுமக்கள் அதிகம் வரு கின்றனர். இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக விருத்தாசலம் பஜார் தெருவில் உள்ள துணை அஞ்சல் அலுவலகத்தில் புதிய ஆதார் சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளி மாணவர்களின் ஆதார் சேவையை பூர்த்தி செய்யும் வகையில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் ஆதார் சிறப்பு முகாம் நடந்து வருகிறது. அதனால், மூன்று இடங்களில் நடக்கும் ஆதார் சேவை மையத்தை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முழுமையாக பயன் படுத்திக்கொள்ள வேண்டும்.
மேலும், குழந்தைகளுக்கு புதிய ஆதார் எடுத்தல், பிறந்ததேதி, பெயர் மற்றும் முகவரி திருத்தம், உள்ளிட்ட சேவை களை பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

