UPDATED : அக் 17, 2026 03:56 PM
ADDED : அக் 17, 2026 03:54 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, உதவி தலைமை ஆசிரியர் அக்பர் தலைமை தாங்கினார். ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். ஆசிரியர்கள் ராஜிவ்காந்தி, கந்தவேல் ஆகியோர் அப்துல்கலாம் பணிகாலம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதில், மாணவர் எழுச்சி நாளாக அப்துல் கலாம் குறித்து கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தி, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஆசிரியர் சிவகாமி நன்றி கூறினார்.
