UPDATED : அக் 17, 2026 05:05 PM
ADDED : அக் 17, 2026 04:02 PM

அ நிறம் | அளவு
வேப்பூர்: வேப்பூரில் வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் ராமர் வரவேற்றார். வருவாய், ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, காவல், தீயணைப்பு உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். அதில், தாழ்வான பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக தங்குமிடம், பள்ளி கட்டடம் மற்றும் நீர்நிலைகளின் கரைகளை ஆய்வு செய்து சீரமைப்பது, குடியிருப்புகளில் மழைநீர் தேங்காமல் பராமரிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
