/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அகாடமி கோப்பை கிரிக்கெட் ஏ.சி.சி., அணி சாம்பியன்
/
அகாடமி கோப்பை கிரிக்கெட் ஏ.சி.சி., அணி சாம்பியன்
ADDED : மே 20, 2025 07:18 AM

கடலுார்: கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் நடந்த மாவட்ட அளவிலான அகாடமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி யில் ஏ.சி.சி., அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
கடலுார் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான அணிகள் பங்கேற்ற அகாடமி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி துவங்கியது.
மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 16 அணிகள் பங்கேற்றன. போட்டி நாக் அவுட் முறையில் நடந்தன.
இறுதிப் போட்டியில் ஏ.சி.சி., அணியும், கடலுார் காஸ்மோ அணியும் மோதின. அதில் ஏ.சி.சி., அணி வெற்றி பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு கிரிக்கெட் சங்க மாவட்ட தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.