நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : காந்தி நினைவு நாள் மற்றும் தியாகிகள் தினத்தையொட்டி, விருத்தாசலத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கினார்.
நேர்முக உதவியாளர் செல்வமணி உறுதிமொழி வாசித்தார். இதேபோல், தாசில்தார் உதயகுமார் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தலைமையிடத்து துணை தாசில்தார் கோவிந்தன் உட்பட அலுவலக ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.