/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 28, 2024 04:45 AM

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையம் சார்பில் திருக்கண்டேஸ்வரம் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் தேவனாதன் தலைமை தாங்கினார். இதில் நிலைய அலுவலர் கவிதா பேசுகையில், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும். பெரியவர்களை அருகில் வைத்து கொண்டு வெடிப்பது நல்லது. வெடிக்காத பட்டாசுகளை கையால் எடுக்காமல் பாதுகாப்பாக அப்புறபடுத்த வேண்டும். தீவிபத்து ஏற்பட்டால் உடனே அணைக்க தேவயான தண்ணீரை அருகில் வைத்திருக்க வேண்டும்' என்றார்.
தீவிபத்து ஏற்பட்டால் அணைப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

