/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : அக் 29, 2024 06:56 AM

மங்கலம்பேட்டை: விருத்தாசலம் அடுத்த புலியூர் அரசு உயர்நிலை பள்ளியில் பயிலும் காவல் படை மாணவர்களுக்கு, மங்கலம்பேட்டை தீயணைப்பு துறை சார்பில், விபத்தில்லா தீபாவளி மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது மற்றும் வடகிழக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு செயல்முறை விளக்கமளித்து விழப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், தீயணைப்பு வீரர்களின் போலி ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
இதில், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.