/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி., சேர்மனுக்கு சாதனையாளர் விருது
/
என்.எல்.சி., சேர்மனுக்கு சாதனையாளர் விருது
ADDED : அக் 27, 2025 12:15 AM

நெய்வேலி: என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளிக்கு, டாக்டர் அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுபள்ளிக்கு, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் விழாவையொட்டி ஐதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'ஆக்ட் நவ் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.
விருதினை பெற்றுக்கொண்ட என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி பேசுகையில்'' அப்துல் கலாம் எனது ஊக்க சக்தியாகவும், முன்மாதிரி வழிகாட்டியாகவும் கருதுகிறேன். நெய்வேலியைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்காக என்.எல்.சி., இந்தியா தொடர்ந்து மேற்கொண்டுவரும் சமூக-பொருளாதார நலத் திட்டங்களையும் விளக்கி பேசினார்.
விழாவில், புகழ்பெற்ற மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

