/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி யோகா போட்டியில் சாதனை
/
ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி யோகா போட்டியில் சாதனை
ADDED : செப் 21, 2024 06:31 AM

மந்தாரக்குப்பம்: மாவட்ட அளவிலான யோகா போட்டியில் ஜெயப்பரியா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
நெய்வேலி ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இந்தியன் யோகா சங்கம் நடத்திய மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் நடந்தது. இதில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் விருத்தாசலம், கோபாலபுரம், தொழுதூர், திருப்பயர், வடக்குத்து- நெய்வேலி ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 150 பேர் மாவட்ட அளவிலான யோகா போட்டியில் பங்கேற்று வெற்றி கோப்பைகளையும், சாம்பியன் கோப்பைகளையும் வென்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களைப் பள்ளி குழும தலைவர் ஜெயசங்கர், இயக்குநர் தினேஷ், பள்ளியின் முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.