/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி மாணவர்கள் சாதனை
ADDED : மே 18, 2025 02:49 AM

கடலுார்: கடலுார் துறைமுகம் சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 தேர்வில் சாதனை படைத்தனர்.
இப்பள்ளியில் 10ம் வகுப்பு தேர்வில் மாணவி ரூபிதா 500க்கு 493 மதிப்பெண் பெற்று முதலிடம், பிரதிக்ஷா, பிரித்தி 484 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ரித்திகா, ஷிவானி 481 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.
மாணவி ரூபிதா அறிவியல் பாடத்திலும், மாணவிகள் கற்பகவர்ஷினி, கனிஷ்கா சமூக அறிவியல் பாடத்திலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்றனர்.
பிளஸ் 1 தேர்வில் மாணவிகள் சந்தியா, விஷ்ணுபிரியா, அர்ஷயா பியோ ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். சாதனை மாணவிகளை பள்ளி நிறுவனர் சொக்கலிங்கம், தாளாளர் கஸ்துாரி சொக்கலிங்கம், தலைவர் சிவக்குமார், நிர்வாக செயல் அலுவலர் லட்சுமி சிவக்குமார், மக்கள் தொடர்பு அலுவலர் சிவராஜ், பள்ளி முதல்வர் உதயகுமார் சாம் பாராட்டினர்.