/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை
/
ரேஷன் கடைகளை திறக்க நடவடிக்கை தேவை
ADDED : அக் 03, 2024 11:17 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மந்தாரக்குப்பம்: கெங்கைகொண்டான் பேரூராட்சியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட. ரேஷன் கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கெங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி.எஸ்., நகர், மற்றும் என்.எஸ்.வி.,நகரில் தலா 10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து புதிய ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேஷன் கடையை திறந்து வைத்தார். ஆனால் தற்போது வரை ரேஷன் கடை பயன்பாட்டிற்கு வராமல் காட்சி பொருளாக உள்ளது.
எனவே கட்டி முடிக்கப்பட்ட ரேஷன் கடைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.