/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சென்டர் மீடியனில் போஸ்டர் அகற்ற நடவடிக்கை தேவை
/
சென்டர் மீடியனில் போஸ்டர் அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : ஜூன் 28, 2025 06:58 AM
விருத்தாசலம் : விருத்தாசலம் முக்கிய சாலைகளில் உள்ள சென்டர் மீடியன்களில், போக்குவரத்திற்கு இடையூறாக ஒட்டபட்டுள்ள போஸ்டர்களை அகற்ற நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம் நகரத்திற்கு தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் அத்தியாவசிய தேவைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், நகரத்தின் முக்கிய பகுதிகளான பாலக்கரை, கடைவீதி, கடலுார் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த சென்டர் மீடியன்களில் சிலர் திருமணம், பிறந்தநாள், ஆர்ப்பாட்டம், போராட்டம், கண்ணீர் அஞ்சலி, நினைவு அஞ்சலி உள்ளிட்ட பல்வேறு போஸ்டர்களை தினசரி ஒட்டி வருகின்றனர். இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், கவன சிதறல் ஏற்பட்டு, அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.
எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி, போக்குவரத்திற்கு இடையூறாக சென்டர் மீடியன்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்ற, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.