/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை தேவை
/
மின்கம்பத்தை அகற்ற நடவடிக்கை தேவை
ADDED : மார் 02, 2024 06:03 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இடையூறாக உள்ள மின் கம்பத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருத்தாசலம், ஆலடி சாலையில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள்உள்ளன. இப்பகுதிக்கு, பெரியகண்டியங்குப்பம் மின்வாரிய துணைமின் நிலையம்மூலம் மின்வினியோகம் செய்யப்படுகிறது. அதில், வெண்மலையப்பர் கோவிலுக்கு எதிர்புறம் உள்ள வேலன் நகர் செல்லும் வழியில், சாலையின் குறுக்கே மின்கம்பம்உள்ளது.
இங்கிருந்து குடியிருப்புகளுக்கு மின்சப்ளை வழங்கப்பட்டு வந்த நிலையில், சாலைக்கு இடையூறு இல்லாமல் புதிதாக மின்கம்பம் அமைக்கப்பட்டது. இருப்பினும் பழைய மின் கம்பத்தை மாற்றாமல், அதிலிருந்து மின்சப்ளை வழங்குவதால், போக்குவரத்துக்குஇடையூறு ஏற்படுகிறது.
எனவே, பழைய மின்கம்பத்தை அகற்ற் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

