/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நீச்சல் குளங்களாக மாறிய மண் குவாரி குட்டைகள் உயிர்பலிக்கு முன் நடவடிக்கை தேவை

ADDED : மே 14, 2025 12:38 AM

சிதம்பரம் அடுத்த சின்னகுமட்டி, காத்தட்டை, அத்த நல்லுார், நவள்ளம் உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி பெற்று சவுடு மண் குவாரிகள் செயல்பட்டு வந்தது. அந்த மண் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் மண் அள்ளப்பட்டதால், மெகா சைஸ் பள்ளங்களாக மாறியுள்ளன.
கடந்த வாரம் பெய்த மழை காரணமாக காரணமாக, குழிகள் எல்லாம் நிரம்பி குளம் போல் காட்சியளிக்கிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிறுவர்கள், இளைஞர்கள் கோடை வெயிலை சமாளிக்க ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். ஆனால், அளவுக்கு அதிகமாக மண் எடுத்த இடங்களில் சுமார் 20 அடிக்கும் மேல் ஆழமான பகுதிகளும் உள்ளன. சிறுவர்கள் ஆழம் தெரியாமல் குளிப்பதால் ஆபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
ஆபத்தை அறியாமல் குளிக்கும் சிறுவர்கள், விபத்தில் சிக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.