/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
/
மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
மோட்டார் பொருத்தினால் நடவடிக்கை: கமிஷனர் எச்சரிக்கை
ADDED : ஏப் 17, 2025 04:59 AM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் குடிநீர் லைனில் திருட்டு தனமாக மோட்டார் பொருத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லிக்குப்பம் நகராட்சி மூலமாக மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கைலாசநாதர் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் உட்பட நகரம் முழுதும் பலர் சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுப்பதால் மற்றவர்களுக்கு குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
துர்க்கை அம்மன் கோவில் தெருவில் குடிநீர் கிடைக்காததால் பலர் பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன் கூறுகையில், 'நகராட்சி மூலம் மக்களுக்கு போதுமான குடிநீர் வழங்கி வருகிறோம். ஆனால், சிலர் சட்டவிரோதமாக குடிநீர் லைனில் மோட்டார் பொருத்தி குடிநீரை திருடுவதால் மற்றவர்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாக புகார் வந்துள்ளது.
இதுபோன்ற சட்டவிரோதமாக குடிநீர் லைனில் மோட்டார் பொருத்தினால் அவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு, அபராதமும் கடுமையான சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்' என்றார்.