/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆனந்த நடராஜர் கோவிலில் நடிகை கவுதமி தரிசனம்
/
ஆனந்த நடராஜர் கோவிலில் நடிகை கவுதமி தரிசனம்
ADDED : ஜூலை 03, 2025 11:26 PM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில், ஆனி மாத அபிஷேக ஆராதனை விழா நடந்தது.
பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில், உமைய பார்வதி உடனுரை மூலநாதர் அகத்தியர் மற்றும் சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜர் கோவிலில் நேற்று ஆனி மாத அபிஷேக ஆராதனை விழா நடந்தது.
அதையொட்டி, சிவகாம சுந்தரி சமேத ஆனந்த நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அகஸ்தியம் அறக்கட்டளை நிறுவனர் ஈஷ்வர் ராஜலிங்கம், கல்கி பிரபஞ்ச அறக்கட்டளை நிறுவனர் அர்ச்சனா ஈஷ்வர் ஆகியோர் தலைமையில், நடந்தது.
சிறப்பு தீபாரதனை முடிந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அ.தி.மு.க., கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை கவுதமி, பாண்டியன் எம்.எல்.ஏ., சாமி தரிசனம் செய்தனர்.
பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ரங்கசாமி, மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள், ஜெ., பேரவை ஒன்றிய செயலாளர் சுதாகர், கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், இளைஞரனி செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய பாசறை செயலாளர் விஜயராஜா உடனிருந்தனர்.