/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புவனகிரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
/
புவனகிரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
புவனகிரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
புவனகிரி மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : பிப் 18, 2024 12:00 AM

புவனகிரி: புவனகிரி அரசு தலைமை மருத்துவமனையில், 5 கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம் கட்டும் பணியை, வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்.
புவனகிரி தாலுகா, தலைமை மருத்துவமனை போதிய வசதிகளுடன் விரிவு படுத்துவதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கூடுதல் கட்டடங்கள் கட்ட முடிவு செய்தனர். இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். சேர்மன் கந்தன் வரவேற்றார். பொதுப்பணித்துறை கட்டுமான கோட்ட செயற்பொறியாளர் பிரமிளா, புவனகிரி மருத்துவ அலுவலர் முத்துக்குமரன், சுகாதார இணை இயக்குனர் அசோக்பாஸ்கர் (பொறுப்பு) தேசிய சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர் காரல்மார்க்ஸ், ஒன்றிய செயலாளர்கள் மனோகர், மதியழகன் முன்னிலை வகித்தனர்.
வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம், பூமி பூஜையில் பங்கேற்று, கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாசில்தார் தனபதி, முன்னாள் கவுன்சிலர் முத்து, கவுன்சிலர்கள் சண்முகம், ஜோதி, ஒன்றிய துணை செயலாளர் வெற்றிவேல்,மாவட்ட பிரதிநிதி குமார், ஒப்பந்ததாரர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செயல் அலுவலர் செல்லப்பிள்ளை நன்றி கூறினார்.