/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலம் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
/
விருத்தாசலம் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
விருத்தாசலம் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
விருத்தாசலம் மருத்துவமனையில் ரூ.5 கோடியில் கூடுதல் கட்டடம்
ADDED : மார் 14, 2024 11:33 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் அரசு மருத்துவமனையில், ரூ.5 கோடி மதிப்பில் கூடுதல் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், ரூ.5 கோடி மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்ட பூமிபூஜை போடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமை தாங்கினார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., சுகாதாரதுறை இணை இயக்குனர் கிரியேன் ராஜ்குமார், நகர துணை சேர்மன் ராணி தண்டபாணி, தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சாமிநாதன் வரவேற்றார்.
அமைச்சர் கணேசன் பூமி பூஜையில் பங்கேற்று, பணியை துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட குழு நல அமைப்பாளர் ராமு, நகர துணை செயலாளர் நம்பிராஜன், ஒன்றிய செயலாளர் வேல்முருகன், இளைஞரணி அமைப்பாளர் தர்ம மணிவேல், மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,, காங்., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பொறியாளர் சுரேந்தர் நன்றி கூறினார்.

