தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பதிவு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல்  கூடுதல் தலைமை செயலர் அறிவுரை  

பதிவு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல்  கூடுதல் தலைமை செயலர் அறிவுரை  

பதிவு முன்னுரிமை அடிப்படையில் கொள்முதல்  கூடுதல் தலைமை செயலர் அறிவுரை  


ADDED : செப் 26, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: விவசாயிகளின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கி எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டுமென, உணவு பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் அமுதா கூறினார்.  கடலுார் அடுத்த கோதண்டராமாபுரம், பள்ளி நீரோடை, மருங்கூர், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் மற்றும் எம்.அகரம் ஆகிய பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் செயல்பாடுகள் குறித்து கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதா, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் முன்னிலையில் ஆய்வு செய்தனர்.

முன்னதாக, கடலுார் செம்மண்டலத்தில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பின்பற்றப்படும் நடைமுறைகள், நெல் கொள்முதல் தொடர்பாக பின்பற்றப்படும் அனைத்து தரவுகள் குறித்தும் துறை சார்ந்த அலுவலர்களுடன், அரசு கூடுதல் தலைமை செயலர் அமுதா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, அவர் கூறியதாவது: 

நடப்பு 2026–2027ம் ஆண்டு குறுவை பருவத்திற்கான நெல் கொள்முதல் செப்டம்பரில் துவங்கி நடந்து வருகிறது. கடலுார் மாவட்டத்தில் இப்பருவத்திற்கு 199 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.

 இதுவரை 7,927 விவசாயிகளிடம் 5,172.200 மெட்ரிக் டன் சன்னரக நெல், 36,799.800 மெட்ரிக் டன் பொது ரக நெல் என, மொத்தம் 41,972.000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் தொகையாக 109.90 கோடி ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில்  செலுத்தப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் கடந்த 2025–26ம் ஆண்டில் 748 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சன்ன ரக நெல் 2,53,777.960 மெட்ரிக் டன், பொது ரகம் நெல் 3,12,432.920 மெட்ரிக் டன் என, மொத்தம் 5,66,210.880 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. 

விவசாயிகளின் பதிவு முன்னுரிமை அடிப்படையில் டோக்கன் வழங்கி எந்த புகாருக்கும் இடமளிக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும். 

ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கொள்முதல் நிலையம் இணைக்கப்பட்டுள்ள கிராமங்களின் விவரம், நெல் கொள்முதல் நிலையத்தின் வேலை நேரம் மற்றும் சம்மந்தப்பட்ட பணியாளர்கள், அலுவலர்கள் பெயர், மொபைல் எண்ணுடன் கூடிய தகவல் பலகை இருப்பதை உறுதி செய்து கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us