தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கடலுார் மைதானத்தில் கடைகள் அமைச்சர் தகவல் 

கடலுார் மைதானத்தில் கடைகள் அமைச்சர் தகவல் 

கடலுார் மைதானத்தில் கடைகள் அமைச்சர் தகவல் 


ADDED : செப் 26, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் புதிய கடைகள் கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என, அமைச்சர் ராஜ்குமார் கூறினார். 

கடலுார் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் ராஜ்குமார் நேற்று கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், எஸ்.பி., விவேகானந்த சுக்லா, மாநகராட்சி கமிஷனர் கிஷன்குமார், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சரவண துரை மோகன் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். 

பின், அமைச்சர் ராஜ்குமார், கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலுார் மாவட்டத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் துார்வாரும் பணி 30 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை 10 நாட்களில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடு மேற்கொள்ள மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

மின்தடை ஏற்பட காரணம் என்ன என்பது மின்வாரிய அதிகாரியிடம் கேட்டதற்கு பிரேக்கர் பிரச்னையால் மின்தடை ஏற்படுவதாக விளக்கம் அளி்த்தார்.  இனி மின்தடை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. 

கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்து வரும் புதிய கடைகள் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்கு பொதுமக்கள், அரசியல் கட்சிகள், பொது நல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us