/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வீராணம் ஏரி மேம்பாடு குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
/
வீராணம் ஏரி மேம்பாடு குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
வீராணம் ஏரி மேம்பாடு குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
வீராணம் ஏரி மேம்பாடு குறித்து கூடுதல் தலைமை செயலர் ஆய்வு
ADDED : ஏப் 21, 2025 06:48 AM

காட்டுமன்னார்கோவில் : வீராணம் ஏரி மேம்படுத்துவது குறித்து, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி. மேட்டூரில் திறக்கப்படும் தண்ணீர், கீழணை வழியாக வீராணம் ஏரியில் தேக்கப்படுகிறது. இங்கிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவதுடன், 50,000 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகிறது.
இந்நிலையில், கடலுாரில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வீராணம் ஏரி, ரூ. 63 கோடியில் மேம்படுத்தப்படும் என கூறினார். அதன்படி, நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலர் மங்கத் ராம் சர்மா வீராணம் ஏரியை ஆய்வு செய்தார்.
ஏரியில், கந்தகுமாரன் என்ற இடத்தில் உள்ள ராதா மதகு பகுதியில் பணிகள் துவங்கவது குறித்து ஆய்வு செய்து, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார். மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் மரிய சூசை, சிதம்பரம் செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி பொறியாளர் சிவராஜ், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.