/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கூடுதல் வகுப்பறை: எம்.எல்.ஏ., அடிக்கல்
/
கூடுதல் வகுப்பறை: எம்.எல்.ஏ., அடிக்கல்
ADDED : செப் 06, 2025 03:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்:இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
கம்மாபுரம் ஒன்றியம், இருப்பு அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 74.22 லட்சம் ரூபாய் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
தலைமை ஆசிரியர் மனோகர் வரவேற்றார். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்டுமான பணியை துவக்கி வைத்தார்.
செயற்பொறியாளர் சத்யபிரியா, உதவி பொறியாளர் தேவசூர்யா, தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் ஆசைதம்பி, முன்னாள் ஒன்றிய செயலாளர் முருகன், காங்., வட்டார தலைவர்கள் சாந்தகுமார், ராவணன் உட்பட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.